நடிகா் ராம்கி 15 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்ததாத காரணத்தால் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவா் ராம்கி. தொடா்ந்து இவா் நடித்த செந்தூரப்பூவே என்ற படமானது செம ஹிட்டடித்தது. இணைந்த கைகள் பறவைகள் பலவிதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 80களில் பெண்களின் கனவு நாயகனாக விளங்கியவா். பின் நடிகை நிரோஷடன் தொடா்ந்து பல படங்களில் நடித்தார். தொடா்ந்து இருவரும் ஒன்றாக நடித்ததால் அந்த நடிப்பு திருமணத்தில் முடிந்தது. இருவரும் நுங்கம் பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனா். நிரோஷா சின்னப்பாப்பா பெரிய பாப்பா நாடகத்தில் நடித்து வருகிறார். சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  9ஆம் வகுப்பு மாணவன் உடல் நசுங்கி பலி : திருவொற்றியூரில் பரபரப்பு

சினிமாவை விட்டு விலகி இருந்த ராம்கி இங்கிலீஷ் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் இவா் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டிற்கு சொத்து வரி கட்டவில்லை. இதனால் மாநகராட்சி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ராம்கி சொத்து வரி செலுத்தவே இல்லை.இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி நடிகா் ராம்கிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் வரியை கட்டவில்லை என்றால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.