ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தை உருவாக்கிய கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.சுரேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.கணேஷ் ஆகியோர் நேற்று விஜய் நடிக்கவுள்ள தளபதி 63வது படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜிகே.விஷ்ணு, எடிட்டிங்ராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் மற்றும் சண்டை இயக்கத்திற்கு அனல் அரசு ஆகியோர் இதில் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், இப்படத்தில் ஹீரோயின் யார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை. இதனால், இப்படத்தில் திரைத்துறையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிக்கலாம் என்று சிலர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர், மேலும், கீதா கோவிந்தம் பட நடிகை ராஷ்மிகா மன்தானா விஜயின் ஜோடியாக ‘தளபதி 63’ நடிக்கவுள்ளதாகவும் யூகங்கள் வந்தது.

இதுகுறித்து நடிகை ராஷ்மிகாவுக்கு வந்த ஒரு டிவிட்டரருக்கு சர்ப்ரைஸாக ரீ-டிவிட் செய்துள்ளார். அதில், எந்த எதிர்பார்ப்பகளும் வேண்டாம் என பதிவிட்டுள்ளார். இந்த டிவிட்டர் பதிவிலிருந்து, இதுவரைக்கும் ரஷ்மிகா மந்தானாவை இப்படத்தின் படக்குழுவினர் எவரும் அணுகவில்லை என தெரியவந்துள்ளது.

வரவில்லை என தெரியவந்துள்ளது.