இயக்குனர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி குடி போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவரின் கார் மீது அண்ணாநகர் பகுதியில் நேற்று ஒரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால், அந்த கார் நிற்காமல் செல்ல அங்கிருந்த பொதுமக்கள் அந்த காரை மடக்கி நிறுத்தினர். அப்போதுதான் அந்த காரை நடிகர் சக்தி ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க பாஸ்-  நகை பறித்து விற்று.. வட்டிக்கு விட்டு சுகபோகமாக வாழ்ந்த வாலிபர்...

எனவே, அவரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். மதுபோதையில் காரை வேகமாக செலுத்தி வந்த நடிகர் சக்தி தனது காரின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்தியை கைது செய்தனர். அதன்பின் ஜாமினில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.