தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்காக நடிகர் சம்பூர்னேஷ் பாபு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே, தெலுங்கிலும் ஒரு தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இங்கு நடிகர் கமல்ஹாசன் போல், அங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.அப்படி, பிக்பாஸ் வீட்டில் இருந்த பிரபலங்களில் நடிகர் சம்பூர்னேஷ் பாபுவும் ஒருவர். சமீபத்தில் தன்னுடைய உடல் நிலை சரியில்லை மற்றும் பிக்பாஸ் வீட்டின் வசதிகள் தனக்கு போதவில்லை எனக் காரணம் கூறிய அவர், தன்னை வெளியே அனுப்பாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இதைத் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக, அவரை வெளியேற்றிவிட்டது அந்த தொலைக்காட்சி நிறுவனம்.

அந்நிலையில், அவருக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் ரூ.20 லட்சம் அபராதம் விதித்ததாக இன்று செய்திகள் வெளியானது. ஆனால், அதை சம்பூர்னேஷ் மறுத்துள்ளார். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “ எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக பிக்பாஸ்,  ஸ்டார் மா தொலைக்காட்சிக்கு மற்றும் அந்த நிகழ்ச்சியில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த தகவல் முற்றிலும் வதந்தியே. அதில் உண்மையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.