காயத்ரியும் ஆர்த்தியும் ஜூலியை வின்னராக்கி விடுவார்கள். பிரபல நடிகர்

விஜய் டிவியில் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் ரியாலிட்டி ஷோ என்றே கருதுவதில்லை. ஒரு சிறந்த இயக்குனரின் மேற்பார்வையில் பங்கேற்பாளர்கள் அனைவரும் நடித்து வருவது போன்றே உள்ளது.

குறிப்பாக நேற்று காயத்ரியும், ஆர்த்தியும் மாறி மாறி ஜூலியை வெறுப்பேற்றியது கொஞ்சம் கூட நம்பமுடியாத வகையில் சினிமாத்தனமாக உள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் இந்த நாடகத்தை சுவாரஸ்யத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆர்த்தி மற்றும் காயத்ரியின் சேட்டைகளை பார்த்த பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் காயத்ரியும் ஆர்த்தியும் டார்ச்சர் செய்தே ஜூலியை இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாற்றிவிடுவார்கள் போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.