Biggboss kavin – பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள கவினை நகைச்சுவை நடிகர் சதீஷ் கிண்டலடித்து டிவிட் செய்துள்ளார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. சேரன், வனிதா ஜெயக்குமார், லோஸ்லியா, கவின், மதுமிதா, மோகன் வைத்தியா என 15 பேர் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

ஒருவரை பற்றி ஒருவரிடம் போட்டுக் கொடுப்பது, காதல், சண்டை என பிக்பாஸ் வீடு களை கட்ட தொடங்கியுள்ளது. அதிலும், வனிதா எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். கவின் வீட்டில் இருக்கும் எல்லோரையும் காதலித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், எப்பொழுதும் Bath room ல் இருப்பது
A. Paste
B. Brush
C. Kavin ….???

என கிண்டலடித்துள்ளார். அதாவது, பெரும்பாலான நேரங்களில் பாத்ரூமின் அருகில் இருப்பதை அவர் கிண்டலடித்துள்ளார்.

ஏற்கனவே ‘ அது BiggBoss வீடா….?!?! இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா..?!?! (அந்த ஒருத்தர் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கபா’ என வனிதாவை கிண்டலடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.