குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார்.

இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் நடித்து வருகிறார். இதயக்கனி, குறத்தி மகன், படிக்காத பண்ணையார் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் கனகாவிற்கு தந்தையாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே இவர் பிரபலமானார். அதன் பின் சென்னை 28, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை மரணமடைந்தார். அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறவுள்ளது