நடிகையும், பரத நாட்டிய கலைஞருமனான ஷோபனா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி பரவி வருகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் மற்றும் சத்தியராஜ் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஷோபனா. தமிழ் மட்டுமில்லாமல், மலையாளத்திலும் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். அதன் பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு, பரத நாட்டியத்தின் மீது ஆர்வத்தை திருப்பினார்.

அதன் தொடர்ச்சியாக, உலகம் முழுவதும் ஏராளமான பரதநாட்டிய நிகழ்ச்சிகளை அவரின் குழு அரங்கேற்றியுள்ளது. சென்னையில் அவர் ஒரு பரதநாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார். அவருக்கு தற்போது 47 வயது ஆகிறது. ஆனால், இதுவரை திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். ஆனால், தற்பொது அவரின் குடும்ப நண்பர் ஒருவரை அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

தனது திருமணம் குறித்த அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.