மீ டூ என்ற சமூக வலைதளங்களில் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சம்பவங்கள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இதில், நடிகை தனு ஸ்ரீ தத்தா, நடிகர் நானா படகேர் மீது பாலியல் குற்ற்ச்சாட்டு கூறினார்.

தற்போது கோலிவுட்டில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழ்சினிமா மட்டுமல்லாமல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சின்மயிக்கு, நடிகைகள் சமந்தா, வரலட்சுமி சரத்குமார், கஸ்துாரி சங்கர், ஸ்வர்ணமால்யா, பிக்பாஸ் வைஷ்ணவி, நடிகர் சித்தார்த், ஜிப்ரான் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் சமீபத்தில் இந்த பாலியல் சீண்டல்கள் குறித்து டிவிட்டரில், “அச்சம் என்பது மிகப்பெரிய மௌனம். இந்த மௌனத்தால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் சில ஆண்டுகளாகவோ அல்லது எப்போதுமே அமைதியாக இருக்கக்கூடும்.

ஆனால், மீ டூ (metoo) போன்ற விழிப்புணர்வு ஏற்பட்டாலும், அதற்கான சரியான நேரம் வரும் போதும் குற்றவாளிகள் மௌனமாகி விடுவார்கள்.
தற்போது தமிழ் ஊடகங்களும், தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும் மிக மிக அமைதி காத்து வருகின்றன. இதுகுறித்து பேசியது வேண்டியது அவசியம். அதுவும் இப்போதே! என குறிப்பிட்டுள்ளார்.