மணிரத்னம் இயக்கத்தில் அர்விந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண்விஜய், சிம்பு என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இப்படத்தில் சிம்புவின் நடிப்பு எல்லோராலும் பேசப்பட்டது. இப்படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சிம்பு, வெங்கட்பிரபு இயக்கத்தில், ‘மாநாடு’ என்ற படத்திலும், கௌதம்வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘அத்தரிண்டிகி தரேடி’. இப்படத்தின் ரீமேக்கில் சிம்பு நடிக்க உள்ளார். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.

இந்நிலையில்,  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதில், ‘அத்தரிண்டிகி தரேடி’ படத்தில் நடித்த வம்சிகிருஷ்ணா சிம்பு, சுந்தர்.சி படக்குழுவினருடன் சேர்ந்து புககைப்படம் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

https://twitter.com/kolly_Reporter/status/1055667409237901312