விஜய் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு?

நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு, நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் சிம்பு, அஜீத்தின் தீவிர ரசிகர் ஆவார். இதை பலமுறை அவரே கூறியுள்ளார். அந்நிலையில் சிம்பு நடித்த வாலு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது, நடிகர் விஜய் அதில் தலையிட்டு அப்படம் வெளிவர உதவி செய்தார். அதன் பின் விஜய் எனது அண்ணண் என சிம்பு கூறி வந்தார்.

அது ஒரு பக்கம் எனில், ஒரு பக்கம் சிம்பு, நட்பு ரீதியாக தான் நடிக்காத திரைப்படங்களில் கூட பாடல் பாடி வந்தார். தற்போது, அவரின் நண்பரான, நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடு உழைக்கனும்’ என்ற படத்திற்கு சிம்பு இசையமைப்பாளராக மாறியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்ற செய்தி வெளியாகி, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை இயக்கிய முருகதாஸ், அடுத்து மீண்டும் விஜயை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். அப்படத்திற்குதான் சிம்பு இசையமைக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி சிம்பு மற்றும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.