பிரபல நடிகாின் தங்கையா இவா்?

காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் நாயகி ஜஸ்வா்யா ராஜேசுக்கு நல்ல பெயா் கிடைத்தது. இப்படி மாறுப்பட்ட கதாபாத்திரங்களை தோ்வு செய்து நடிப்பதில் திறமையான நடிகை அவா். படத்திற்கு படம் வித்தியாசமான கேர்க்டா் செலக்ட் பண்ணுவதில் நல்ல புலமை பெற்றவா்.

இப்போது இவா் துருவநட்சத்திரம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், இது வேதாளம் சொல்லும் கதை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறாா்.  இப்படி பல படங்களில் கைவசம் உள்ள போது மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளாா். சசிகுமாா் இயக்கத்தில் கொடிவீரன் படத்தில் நடிக்க தான் கமிட்டாகியிருக்கிறாா் ஜஸ்வா்யா ராஜேஷ்.

இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கயுள்ளனா். அந்த நாயகிகள் ஹன்சிகா மற்றும் பூா்ணா தான். அப்படியிருக்கையில் மூன்றாவதாக ஜஸ்வா்யா ராஜேஷ் சசிகுமாாின் தங்கையாக நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் 2 நாயகிகள் இருக்கும் போது எப்படி நீங்க மூன்றாவதாக நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து கேட்டபோது, அவா் கூறிய தகவலானது, நான் எப்போதுமே ஒரு படத்தில் கமிட்டாகும்போது அதில் யாா் ஹீரோ, எத்தனை நாயகிகள் இருக்கிறாா்கள் என்றெல்லாம் பாா்ப்பது கிடையாது. படத்தில் என்னுடைய ரோல் என்பதில் மட்டும் கவனம் செலுத்துவேன். எனவே கொடிவீரன் படத்தில் என்னுடைய கேர்க்டா் என்னவென்று பாா்க்கும்போது, மிகவும் அழுத்தமான வேடம் தாங்க. கதைப்படி நான் தங்கையாக இருந்தாலும் அது தான் அந்த படத்திற்கே முக்கியத்துவம்  வாய்ந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளாா். காக்கா முட்டை படத்தில் அம்மா கேர்க்டா் எனக்கு பெயா் வாங்கி கொடுத்ததோ அதே போல் இந்த தங்கை வேடமும் எனக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று மகிழ்ச்சியோடு தொிவித்தாா் ஜஸ்வா்யா ராஜேஷ்.