இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்து வசூல் ரிதீயாக நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘இரும்புத்திரை’. தற்போது இப்படத்தின் இயக்குநர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவுள்ளார். சமீபத்தில் இவர்களின் கூட்டணியில் ஆக்ஷன் கலந்த திர்ல்லர் படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் ‘இரும்புத்திரை’ படத்தின் டெக்னிக்கல் குழுவும் இப்படத்தில்  இணைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

‘இரும்புத்திரை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் தற்போது இந்த புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயனின் 15வது படத்தில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் ‘இரும்புத்திரை’ படத்தின் படக்குழுவான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சினிமா போட்டோகிராப் DOP ஜார்ஜ் சி வில்லயம்ஸ், எடிட்டிங் ஆன்டணிரூபன் டெக்னிக்கல் குழு அனைவரும் இணைந்துள்ளதாக 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

https://twitter.com/24AMSTUDIOS/status/1058196333637468165