பாலிவுட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘பிரம்மாஸ்த்ரா’ படத்தின் தமிழ் லோகோ வெளியீடு.

 

கரண் ஜோகர் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பாலிவுட் படம் ‘பிரம்மாஸ்த்ரா’. இப்படத்தை அயன் முகர்ஜி என்பவர் இயக்குகிறார். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,ரன்பீர் கபூர் மற்றும் நடிகை அலியா பட் நடிக்கின்றனர்.

‘பிரம்மாஸ்த்ரா’ படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் முதல் பாகத்தை வரும்  கிருஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழ் அறிமுக லோகோவை நடிகர் சூர்யா மற்றும் தனுஷ் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.