நடிகர் சூர்யாவின் மகன் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

சூர்யாவுக்கு அவ்வளவு பெரிய மகனா என அதிர்ச்சி அடையாதீர்கள். சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு தேவ் சவிக்குமார் என்கிற மகன், தியா என்கிற மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  எனக்கு கிடைத்தால் அது விஜய்க்குதான் சமர்ப்பிப்பேன்: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

இந்நிலையில், அறிமுக இயக்குனர் ஒருவர் சூர்யா – ஜோதிகாவை சந்தித்து ஒரு கதையை கூறினாராம். ஒரு சிறுவனுக்கும், நாய்க்குட்டிக்கும் இடையேயான பாசப்பிணைப்பு பற்றிய கதையாம். சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் கதை பிடித்திருந்தாலும், அதற்குள் மகனை சினிமாவில் நடிக்க வைப்பதா என யோசித்து வருகின்றனராம்.

இதையும் படிங்க பாஸ்-  ஹீரோ அவதாரம் எடுக்கும் காமெடி நடிகர் ஜனகராஜ்

ஆனாலும், கதை பிடித்திருப்பதால் விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.