பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகை டாப்சி நடிப்பில் வெளிவந்த படம் ‘மன்மர்சியன்’.இப்படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’படத்தில் சைக்கோ கில்லர் வில்லனாக நடித்திருந்தவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். அந்த படத்தில் அவரது நடிப்பு எல்லோராலும் பேசப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக அனுராக் காஷ்யாப் தயாரிக்கும் புதிய படத்தில் டாப்சி நடிக்கிறார்.

துஷார் ஹிராநந்தினி இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக உள்ள இப்படத்தில், டாப்சி துப்பாக்கிச் சுடும் வீராங்கனணயாக நடிக்கிறார்.

இப்படத்திற்காக தற்போது டாப்சிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.