சாவித்ரி கதையில் ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மான்…

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு சினிமாவில் ஜெமினி கணேசன் வேடத்தில் கேரள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படவுள்ளது. நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்திற்கு மகாநதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான சாவித்ரி வேடத்தில் நடிகை சமந்தா நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. அதன் பின் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர்கள் இருவருமே அப்படத்தில் நடிக்கின்றனர்.

அதேபோல், சாவித்ரியோடு அதிக படங்களில் நடித்தவரும், அவரின் கணவருமான ஜெமினி கணேசன் வேடத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என தெரிய வந்தது. தற்போது அந்த வேடத்தில் கேரள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்க இருக்கிறார்கள்.