தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான த்ரிஷா தற்போது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தின் மூலம்
ரஜினிகாந்த் உடன் முதன் முறையாக இணைந்து
நடிக்கவுள்ளார்.

நடிகை த்ரிஷா தற்போது ஹீரோயின் சப்ஜெக்ட் உடைய கதைகளை
தேர்வு செய்து நடித்து வருகிறார். பிரேம் குமார் இயக்கத்தில்
நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ’96’ திரைப்படத்திலும்
நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில், அவர் சொகுசு விடுதியின் நீச்சல்
குளத்தில் டால்பினுடன் விளையாடுவது போன்ற
புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

தற்போது அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள், விலங்குநல
ஆர்வலர்கள் பலர் கண்டன எதிர்ப்புகளை கூறியுள்ளனர்.
இதற்குக் காரணம்,த்ரிஷா விலங்குகள் நல அமைப்பான
பீட்டாவில் உள்ளார்.

இதற்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பரிதா, ‘கடலில்
வாழும் உயிரினம் டால்பின். பொழுதுபோக்கு பூங்காவில்
அவை சுதந்திரமாக இருக்க முடியாது. அவைகளை
விருப்பம்போல் வாழவிடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் விலங்குகள் பாதுகாப்பு
அமைப்பை சேரந்த பத்மா கூறியதாவது, ‘மனிதர்களுடன்
வியைாடுவது டால்பின்கள் வேலை இல்லை. அவை
பொம்மையும் கிடையாது.சித்ரவதை செய்து தாங்கள்
சொல்லும் வேலலையை செய்ய வைக்கிறார்கள்.
அவைகளுடன் மனிதர்கள் விளையாடுவது கொடுமையானது’
என கூறியுள்ளார்.