இயக்குனர் மணிரத்னம், தளபதி படத்தின் 2ம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான படம் தளபதி. இதில் ரஜினியும், மம்முட்டியும் நடித்திருந்தனர். தற்போதும் கேங்ஸ்டர் படம் என்றால் தளபதியை அனைவரும் மேற்கோள் காட்டுகின்றனர். மேலும், நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ரஜினியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தளபதி-2 வை இயக்க மணிரத்னம் முடிவெடுத்திருப்பதாகவும், அதில் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜயும், மற்றும் மம்முட்டி கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி உலாவருகிறது.

இதுகுறித்து கதை விவாதத்தில் மணிரத்னம் ஈடுபட்டிருப்பதாகவும், நடிகர் கார்த்தி நடித்து வரும்  ‘காற்று வெளியிடை’ படத்தின் பணி முடிந்த பின்பு, இந்த படத்தை அவர் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கும், விஜய் மற்றும் விக்ரம் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.