திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சென்னை மதுரவாயில் ஆலப்பாக்கம் பகுதியில் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அதில் அவரின் 5 மகள்களில் ஒருவரான வனிதா சில வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார்.

பல வருடங்களாக இருவருக்கும் இடையே பிரச்னை நிலவி உள்ளது. இந்நிலையில், தனது வீட்டை காலி செய்து தருமாறு நடிகர் விஜயகுமார் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  கிடுக்கிப்பிடி போட்ட ஷங்கர்: வழிக்கு வந்த வடிவேலு

அதற்கு வனிதா தனக்கும் சொத்தில் பங்கு உள்ளதால், இந்த வீடு தனக்கு சொந்தம் என்று கூறியுள்ளார். மேலும், வீட்டை காலி செய்ய முடியாது என்று கூறியுள்ளதாக நடிகர் விஜயகுமார் கூறியுள்ளார்.

இதனையடுத்து, நடிகர் விஜயகுமார் மதுரவாயல் காவல்நியைலத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகள் வனிதா தனது வீட்டை படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வீட்டை வாடகைக்கு விட்டதாகவும், தற்போது வனிதா வீட்டை அவரது வீடு என்று கூறி காலி செய்யாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.