ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு
உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு
ரிலீசாக உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  'சர்கார்' படத்துக்கு மறுபடியும் பிரச்சனையா?

இந்நிலையில், விஜய்யின் அடுத்து நடிக்கும் புதிய படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ படத்தினைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அட்லி-விஜய் கூட்டணியில் புதிய படம்
உருவாக உள்ளது.

‘மெர்சல்’ படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் இந்த புதிய படத்திலும் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மெர்சலை ஏற்படுத்தும் ‘மெர்சல்’ டீசர்

இந்த படத்தை ‘ஏஜிஎஸ்’ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்பட்டத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளது.