Kalavani 2 Vimal – இனிமேல் ஆபாச திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகர் விமல் பேசியுள்ளார்

நடிகர் விமலும் ஓவியாவும் நடித்துள்ள களவாணி2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே சற்குணம் இயக்கத்தில் களவாணி முதல் பாகம் 10 வருடங்கள் முன்பு வெளியானது தற்போது 10 வருடம் கழித்து களவாணி 2 வெளியாகியுள்ளது.

இப்படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய விமல் இப்படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல கதை அமைந்தால் களவாணி மூன்றாம் பாகத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.

அது இன்னும் 10 வருடம் கழித்தும் நடக்கலாம் அல்லது அடுத்த வருடமே கூட நடக்கலாம். இனிமேல் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் அந்த படம் படமாக்கப்பட்டதும், அந்த படத்தின் தலைப்பை வைக்கப்பட்டதும் என்னை மீறி நடந்த விஷயங்கள் ஆகும். அந்த படத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என அவர் பேசியுள்ளார்.