நடிகர் விஷால் நடிகர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கிறார். அடிக்கடி பிரச்னையில் சிக்கி கொள்ளும் இவரை சுற்றி எப்போதும் சர்ச்சை இருக்கும்.

அந்த வகையில் தற்போது விஷாலை போலிஸ் கைது செய்வது போல் இணையத்தில் சில  படங்கள் இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க பாஸ்-  இவர் படதில் இவரா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இதை பார்த்த அனைவருக்கும் ஷாக் தான், ஆனால், சிறிது நேரம் கழித்து தான் தெரிந்தது இது விஷால் புதிதாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் என்று. பலரும் இதை உண்மை என்றே நம்பிவிட்டனர்.

இந்த புகைப்படங்கள் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் அயோக்யா படத்தின் காட்சிகள் என்பது தெரியவந்துள்ளது.