நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சை கருத்தை சொன்ன ராதாரவிக்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை குறித்து கீழ்தரமாக விமர்சித்தார் . இதனால் நடிகர் ராதாரவிக்கு எதிராக  , திரைத்துறையினர்கள்,ரசிகர்கள் , நெட்டிசன்கள் என பலரும் சமூக வலைதளங்களில்  கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ,நடிகர் ராதாரவியை கண்டித்து அவரை திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் ராதாரவியை கண்டித்து டிவிட் செய்துள்ளார். அதில் `டியர் ராதாரவி சார், சமீபத்தில் பெண்களை குறித்து உங்களின் கீழ்தரமான கருத்துகள் வன்மையாகக் கண்டிக்கதக்கது, மேலும் உங்களை கண்டித்து கடிதம் ஒன்றை நடிகர் சங்கக் கடிதத்தில் கையெழுத்திடுவதில்  நடிகர் சங்க பொதுச் செயலாளராக மகிழ்ச்சியடைகிறேன்.  இந்தக் கடிதம் விரைவிலேயே உங்களிடம் வந்து சேரும். இனி கொஞ்சமாவது உங்க புத்திய வளத்துகோங்க. இப்போதிலிருந்து உங்க பேர `ரவி’ என்று வைத்துக்கொள்ளுங்கள் காரணம், உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயரும் இருக்கிறது” என விஷால் பதிவு செய்துள்ளார்.