வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிய விஷால் – பின்னணி என்ன?

சினிமா துறை சார்பில் வருகிற 30ம் தேதி அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை, நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வாபஸ் பெற்றுள்ளார்.

புதிய படங்களுக்கான சேவை வரி குறைப்பு, திருட்டு விசிடி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30ம் தேதி முதல் சினிமா துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் எனவும், அன்று முதல் சினிமா படப்பிடிப்பு எதுவும் நடைபெறாது என விஷால் அறிவித்திருந்தார்.

இதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை ஆகியவை ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டன. மேலும், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என இயக்குனர்கள் சங்கம் சார்பாக ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

எனவே, இந்த போராட்டத்தை விஷால் வாபஸ் பெற்றார்.