நடிகர் விஷால் தொகுத்து வழங்கும் நாம் ஒருவர் நிகழ்ச்சி சன் டிவியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கும் நபர்களை தேடி கண்டுபிடித்து அவர்களால் இயன்றவரை உதவி செய்து கொடுப்பது.

அதன் படி நடிகர்கள் தங்களுக்கு இருக்கும் புகழை பயன்படுத்தி மற்றவர்களிடம் உதவி கேட்டு நிதி உதவி கேட்டு பெற்றுத்தருவதும், தங்களால் இயன்றதை கொடுப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கல்லூரி மாணவர்களிடம் தோசை சுட்டு கொடுத்து ஒவ்வொருவரிடமும் ஆயிரம் இரண்டாயிரம் என நிதி பெற்று ஒரு லட்சம் ரூபாயை, கை கால்களை இழந்த திருப்பூரை சேர்ந்த சிறுவனின் ஆபரேஷனுக்கு கொடுத்தார். அந்த பையனுக்கு புதிய அசைவான கை கால்கள் பொருத்த 5.50 லட்சம் செலவாகும் என தெரிந்து சன் அறக்கட்டளை 2 லட்சம் ரூபாயும், கார்த்தி கலெக்ட் செய்து கொடுத்து 1 லட்சமும் சேர்ந்து மூன்று லட்சம் ஆனது.

தனது சினிமா நண்பர் டிரைடண்ட் ஆர்ட்ஸ் , மற்றும் விநியோகஸ்தர் மது என்பவர் மூலம் மேலும் இரண்டு லட்சம் கேட்டு நிதி உதவியில் சேர்த்தார் விஷால்.

இன்னும் ஒரு லட்சத்தை கார்த்தி தனது சொந்த பணத்தில் கொடுத்து அந்த பையன் அறுவை சிகிச்சை முடிந்து அவன் விரும்பிய சிறிய அளவிளான டிபன் கடை வைக்கவும் சேர்த்து நிதி உதவி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகை வரலட்சுமி டுவிட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.