“என் தேசம் என் உரிமை” கட்சிக்கு நடிகர் விவேக் ஆலோசனை!

ஜல்லிக்கட்டு போராட்டதின் போது இளைஞர்களின் வலிமையை பார்த்து உலகமே வியந்தது. அப்போராட்டத்தின் போது சமுகவலைதலங்களின் மூலம் இணைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் புதிய கட்சியை தொடங்கி அதற்கு “என் தேசம் என் உரிமை”  பெயர் வைத்துள்ளனர்.

மேலும் சமூக வலைதளங்களில் மூலம் கட்சியின் உறுப்பினரை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். இந்த கட்சிக்கு பலரும் வரவேற்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விவேக் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் இளைஞர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியது “இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு ஆயினும் பெருங்ககட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்ல கண்ணு, சகாயம் போன்ற சமூகத்துயவர்களிடம் ஆசியும், ஆலோசனை பெறுவது நலம்” என நடிகர் விவேக் கூறியுள்ளார்.