ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

தனுஷை பாராட்டித் தள்ளிய விவேக் – ஏன் தெரியுமா?

08:03 காலை

நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷை நடிகர் விவேக் பாராட்டியுள்ளார்.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல முகம் காட்டிய நடிகர் தனுஷ், ப.பாண்டி மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஆனால், அதில் அவர் கதாநாயகனாக நடிக்காமல், ராஜ்கிரணை நடிக்க வைத்தார். ராஜ்கிரணின் சிறு வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தார்.

இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவை பெற்றது. ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளும் இப்படத்தை பற்றி நேர்மறையான விமர்சனங்களை எழுதின. மேலும், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் தனுஷின் இயக்கம் பற்றி சிலாகித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தைப் பார்த்த நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் “ இன்ப அதிர்ச்சி…அழுத்தமான கதையம்சம் கொண்ட சிறப்பான படத்தை பார்த்தேன்..ப.பாண்டி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். தமிழ் சினிமாவின் பெருமையாக தனுஷ் திகழ்கிறார்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள தனுஷ் “ ரொம்ப நன்றி சார்.. உங்களுக்கு இந்த படம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி…நீங்கள் படம் பார்க்க வேண்டும் என நான் காத்துக் கொண்டிருந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 48 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com