‘வையம் மீடியாஸ் நிறுவனம்’ சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. இப்படத்தில் நடிகர் விவேக், தேவயாணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அழகம்பெருமாள், பிரேம், வினித், சிறுவர் சிறுமிகளும் நடித்துள்ளனர். குழந்தைகளுக்கு இப்படமானது குழந்தைகளுக்கு படிப்பையும் தாண்டி, தற்காப்புக் கலையை கற்றுத் தருவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு,ஸ்ரீ காந்த் தேவா பின்னணி இசையமைத்துள்ள இப்பத்திற்கு கணேஷ்
சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கும் 30லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை உண்டு என தயாரிப்பாளர் வி.பி.விஜி தெரிவித்திருந்தாார்.

இந்நிலையில் நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில்,“நாளை (18th)வெளியாக இருக்கும் ‘எழுமின்’ திரைப்படத்திற்கு அனைத்து ரசிக பெருமக்களும் ஆதரவு தர, எழுமின் திரைப்பட குழு சார்பில் வேண்டுகிறோம்” என பதிவிட்டிருந்தார்.