உன் அலம்பல் தாங்க முடியலப்பா- தனுஷை கலாய்த்த நடிகர்

தனுஷ் நடித்து அடுத்து வரும் படம் வேலையில்லா பட்டதாரி 2. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி தாணுவுடன் இணைந்து தனுஷ் தயாரித்துள்ளார். விஐபி2 படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பின்னர் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடுவது என்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் கௌண்டவுண் வேலைகளை பார்த்தார். அதாவது விஐபி2 போஸ்டரை போட்டு அதில் இன்னும் 7 தினக்களில், 6 தினங்களில் என்று ஏலம் விட்டுக் கொண்டிருந்தார். மேலும் மலேசியாவில் வெளியாகும் திரையரங்களின் லிஸ்டையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் இவரது அக்கப்போரை பார்த்த நடிகர் விவேக், தனுஷ் உன் அலம்பல் தாங்க முடியலப்பா என்றும், தனுஷ்,சௌந்தர்யா கடின உழைப்பாளிகள் என்றும் பதிவிட்டிருந்தார். அதற்கு தனுஷ் நன்றி தெரிவித்திருந்தார்.