நடிகர் விவேக் பசுமை ஆர்வலர் ஆவார். பல கல்லூரிகளில் தனது கலாம் பவுண்டேஷன் மூலம் மரம் நடுவது, இயற்கை சம்பந்தமான விசயங்களுக்கு பிரச்சாரம் செய்வது என நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது சமூக வலைதள பக்கங்களிலும் பெரும்பாலும் தான் நடிக்கும், நடித்த படங்கள் பற்றிய செய்திகளே பெரும்பாலும் இருக்காது.

கண்மாய் தூர் வாருதல், ஞானிகளின் தத்துவங்கள், மரம் நடுதல் என இப்படியான செயல்களே அதிகம் இருக்கும்.

இந்நிலையில் ப்ளாஸ்டிக் ஸ்ட்ராக்களை ஒழித்துவிட்டு பேப்பர் ஸ்ட்ராக்களை பயன்படுத்துமாறு விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.