ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில்உருவாகி வரும் படம்
‘சர்கார்’. இப்படத்தினை ‘சன் பிக்சர்ஸ் நிறுவனம்’
தயாரிக்கிறது.

இப்படத்தில் யோகிபாபுவின் டப்பிங் முடிந்துவிட்டதாக தனது
ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘சர்கார்’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார்,
யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாராவி உள்பட பல
நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  இந்த புகைப்படத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் யாருக்காவது தெரியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ்
கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை
வெளியீடு விழா வருகிற அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி காந்தி
ஜெயந்தி அன்று நடைபெற இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியன்று
வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு வைத்த விஷால்!

இப்படத்தின் சிங்கிள் டிராக் வருகிற செப் 24-ஆம் தேதி
வெளியடப் போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்
நடைபெற்று வருகிறது. இந்நிலையில், யோகிபாபு தனது
டப்பிங்கை முடித்திருக்கிறார்.