2015-ல் நடந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று விஷால் fஅணியினர் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 வருட பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதமே முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைத்துள்ளார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி சொன்னதால் தேர்தலில் நிற்கிறேன் - பாக்யராஜ் பேட்டி

தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. தரைதளமும் 3 மாடிகளும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு மாடி கட்டப்பட உள்ளது. இதுவரை அலுவலக அறைகள், கலை அரங்கம், மாநாட்டு கூடம், திருமண மண்டபம், உடற் பயிற்சி கூடம், நடன பயிற்சி அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. ஓரிரு மாதங்களில் கட்டுமான பணிகளை முடியும் என தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  ஏன் பணம் கொடுக்குறம்னா …? – இவ்ளோ ஓபனாவா பேசுறது பாக்யராஜ் சார் ?

மே அல்லது ஜூன் மாதம் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வருகிற மே மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது விஷால் அணியினர் மீண்டும் போட்டியிட  திட்டமிட்டுள்ளனர்.