தன்னை படுக்கைக்கு பயன்படுத்திவிட்டு பல கதாநாயகர்கள் துரோகம் செய்தனர் என ஆந்திர நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் கூறியுள்ளார்.

ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திர நடிகைகள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறினார். அதன்பின் ஆந்திராவிலிருந்து வெளியேறி சென்னையில் குடியேறினார்.

இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் “பொதுக்கழிப்பறை போல் என்னை பயன்படுத்தினார்கள். அது கொடுமையானது. அதி என் பங்கும் இருக்கிறது. சினிமா வாய்ப்புகளுக்காகவே என் உடல் அனைத்தையும் தாங்கிக்கொண்டது. நான் கண்டிப்பாக விரும்பி அதை ஏற்கவில்லை. என் வாழ்க்கையில் பயமான காலங்கள் அது. வெளிப்படையாக பேசியது என் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார்.