இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது இயக்கி வரும்  ‘நரகாசுரன்’ படத்தில், கதாநாயகியாக ‘மீசையை முறுக்கு’ படத்தில் நடித்த ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘துருவங்கள் 16’ படம் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை அடுத்து அவர் நரகாசுரன் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிருஷ்ணன், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆனால், கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது இதுவரை உறுதியாகாமல் இருந்தது. தற்போது அந்த வேடத்தில் ‘மீசையை முறுக்கு’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆத்மிகா இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த தகவலை கார்த்திக் நரேன் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும், செப்.16ம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.