Gayathri Raghuram – அரசியலில் இருந்து நடிகை காயத்ரி வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

சில திரைப்படங்களில் நடித்தவரும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த சில வருடங்களாக பாஜக கட்சியில் இணைந்து, சமூக வலைத்தளங்களில் அக்கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் வெறுப்புக்கு உள்ளானவர் காயத்ரி ரகுராம். அதன்பின், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார்.

இந்நிலையில், தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அரசியல் கீழ்த்தரமாக மாறிவிட்டது. குழந்தைகள் போல் மற்றவர்களை குறை சொல்வதுதான் அரசியல் ஆகிவிட்டது. பக்குவமான தலைவர்கள் இங்கே யாரும் இல்லை. உருப்படியான காரியம் எதுவும் இங்கு நடக்கவில்லை. எனக்கு அரசியலில் ஆர்வம் போய்விட்டது.

இறுதியில் நம்மை ஜோக்கராக மாற்றி விடுகிறார்கள். சினிமாவில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். பொய்யான தலைவர்கள், பொய்யான உறுப்பினர்கள் எல்லாம் பொய்.. அரசியல் என்பது வில்லன் கதாபாத்திரம் ஆகிவிட்டது. எனவே அரசியல் இருந்து வெளியேறுகிறேன். எந்த அரசியல் கட்சியையும் நான் தற்போது ஆதரிக்கவில்லை. இது என் சொந்த முடிவு. அனைவருக்கும் நன்றி என புலம்பி தள்ளியுள்ளார்.