அந்த நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – கஸ்தூரி ஓபன் டாக்

தன்னை ஒரு பிரபல நடிகர் படுக்கைக்கு அழைத்தார் என நடிகை கஸ்தூரி பேட்டியளித்துள்ளார்.

அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. அதன் பின், சினிமாவிலிருந்து விலகி ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருகு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். அவரது மகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பதற்காக அவர் சமீபத்தில் சென்னை வந்தார். அப்போது,அவர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சினிமா உலகில், கதாநாயகிகள் தங்களை அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என சில நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடக்கவில்லை எனில், அந்த நடிகைகளுக்கு பல வழிகளில் நெருக்கடி கொடுப்பார்கள். அதுபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். தற்போது பிரபல அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகரோடு, நான் ஒரு படத்தில் நடித்தேன். அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டேன். உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ” என கஸ்தூரி கூறினார்.