நடிகை விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில், அவரிடம் உதவி கேட்டு வந்த மலையாள நடிகை கவலம் அச்சம்மா மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்து வருகிறது. அப்போது அங்கு வந்த ஒரு மூதாட்டி தனக்கு மருந்து செலவுக்கு பணம் வேண்டும் என விஜய் சேதுபதியிடம் கேட்டார்.

எனவே, விஜய் சேதுபதி தனது மேனேஜரிடம் தனது பர்சை எடுத்து வரச்சொல்லி அவருக்கு பணம் கொடுத்தார். அதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில், விஜய்சேதுபதியிடம் பனம் வாங்கிய அந்த மூதாட்டி அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விஜய் சேதுபதியிடம் பணம் வாங்கிய மூதாட்டியின் பெயர் கவலம் அச்சம்மா என்பதும், நடிகர் ஜெயராம் படம் உட்பட சில படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.