Game of thrones – கேம் ஆம் த்ரோன்ஸ் 8வது சீசனில் இடம் பெறும் நிர்வாண காட்சியில் நான்தான் நடித்தேன் என நடிகை லீனா ஹெட்டே தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் திரைப்படங்களுக்கு இணையாக தொலைக்காட்சி தொடர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில், கேம் ஆப் த்ரோன்ஸ் தொடருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இதுவரை இந்த தொடரில் 8 சீசன் வெளியாகியுள்ளது.

இதில் 8 வது சீசனில் இப்படத்தில் Cersei Lannister என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை லீனா ஹெட்டே. இப்படத்தில் ஒரு காட்சியில் உடலில் உடை இல்லாமல் அவர் நடந்து வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால், அது அவரே இல்லை என கிண்டலடித்து வருகின்றனர்.

இதுபற்றி விளக்கமளித்துள்ள லீனா “அந்த காட்சியில் நடித்தது நான்தான். அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். எனவே, என் வயிறு பெரிதாக தெரியும் என்பதால் உடலை இரு மடங்காக காட்டினர்” என விளக்கமளித்துள்ளார்.