பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் திடீர் மரணமடைந்துள்ளார்

80 மற்றும் 90 களில் ஏராளமான இந்தி படங்களில் நடித்தவர் மகேஷ் ஆனந்த். தமிழில் விஜயகாந்த் நடித்த பெரிய மருது படத்தில் வில்லனாகவும், ரஜினி நடித்த ‘வீரா’ படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். பாலிவுட்டில் மட்டும் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

நடிகை உஷா பச்சாணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அதன்பின் அவரிமிருந்து விவாகரத்து பெற்றார். 2002ம் ஆண்டு முதல் மும்பை வெர்சோவாவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று அவரின் அறை திறக்கப்படவில்லை. வேலைக்காரப் பெண் கதவு தட்டியும் அவர் வெளியே வரவில்லை. இதனால், அப்பெண் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது அவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவரின் வயது 56.

அவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.