அனிருத்தோடு சுற்றும் இளம் நடிகை – அடுத்த விக்கெட் இவரா?

இசையமைப்பாளர் அனிருத்தோடு இளம் நடிகை மஞ்சிமா மோகன் சுற்றி வருவதாக கிசுகிசு எழுந்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் பற்றி கிசுகிசு எழுவது புதிதில்லை. முதலில் நடிகை ஆண்ட்ரியாவும், அவரும் காதலிப்பதாகவும் செய்தி வெளியானதோடு, அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதுபற்றி அவர் வெளிப்படையாக எந்த கருத்தும் கூறவில்லை. அவர்கள் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. அதன்பின், நடிகர் சிம்புவின் பெயரில் வெளியான பீப் பாடலுக்கு அவர்தான் இசையமைத்தார் எனக் கூறப்பட்டது. காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. ஆனால், அனிருத் அதை மறுத்தார்.

அதன்பின், அவர் பெயரில் ஒரு ஆபாச வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் ஒரு இளம் பெண் ரசிகையுடன் அவர் உல்லாசமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என அனிருத் மறுத்தார்.

அந்நிலையில், சமீபத்தில் நடிகர், நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள், பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து வெளியானது. அதிலும், அனிருத், ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்த பழைய புகைப்படம் வெளியானது. அதுபற்றி அவர் எந்த கருத்தும் கூறவில்லை.

இந்நிலையில், அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த கேரள நடிகை மஞ்சுமா மோகன், அனிருத்துடன் நெருங்கி பழகுவதாகவும், எங்கு சென்றாலும் அவர்கள் இருவரும் இணைந்தே செல்வதாகவும், நட்சத்திர ஹோட்டல்களில் அவர்கள் இருவரும் பலரின் கண்ணில் படுவதாகவும் கிசுகிசு எழுந்துள்ளது.

எனவே, அனிருத்தின் அடுத்த விக்கெட் இவர்தானா என சினிமா வட்டாரத்தில் கிண்டலடிப்பதாகவும் கூறப்படுகிறது.