பேட்ட படத்தில் நடிக்க முடியாமல் போயிற்று என நடிகை மீரா மிதுன் புலம்பி வருகிறார்.

8 தோட்டக்கள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை மீரா மிதுன். சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாகவும் அவர் நடித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இவர் மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார். மாடலிங், சினிமா இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவருக்கு பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகியை தேர்ந்தெடுக்கும் ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வேடத்தில்தான் திரிஷா நடித்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கடாரம் கொண்டான் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிகக் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் அதுவும் பறிப்போனது.

ஆனாலும், தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையும் என நம்பிக்கையோடு இருக்கிறார் மீரா மிதுன்.