புதிய படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி….

07:13 மணி


தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்கும் புதிய படத்திற்கு நடிகை நயன்தாராவிற்கு அதிக சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

Loading...

நடிகை நயன்தாரா தற்போது தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். அவரின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது அவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். அதன் விளைவாகத்தான் நானும் ரவுடிதான், மாயா போன்ற படங்கள் வெளிவந்தன. மேலும், அவரது வித்தியாசமான நடிப்பில் இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம், வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன. தமிழில் அவர் தற்போது ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கில் ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ என்பவரின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து  உருவாக்கப்படுகிறது.

மொத்தம் ரூ.150 கோடி செலவில் இப்படத்தை, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை அணுகிய போது ரூ.6 கோடி சம்பளம் பேசினாராம் நயன். அதை கொடுக்க ராம்சரணும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன் ஆகியோரும் சிறு வேடங்களில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 20 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com