காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிம்புவுடன் ‘குத்து’ படத்தில் நடித்ததால் குத்து ரம்யா என அழக்கப்பட்டார். அதன்பின்,  சினிமாவிலிருந்து விலகி அரசியலில் நுழைந்து காங்கிரஸ் எம்.பி. ஆனார். அதன்பின், கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், தீடீரெனெ ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக, அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அவர் உணவு, விஷமாக மாறியிருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நல்ல ஓய்விற்கு பின் அவர் நலமாவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரை சந்திக்க அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மருத்துவமனையின் முன்பு குவிதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.