Connect with us

செய்திகள்

பிக்பாஸ் நடிகைக்கு அடிச்ச யோகம்.. தல படத்தில் வாய்ப்பு..

Published

on

அஜித் 60 திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் வெளியேற்றப்பட்ட நடிகை ரேஷ்மா நடிக்கவுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ரேஷ்மா. இவர் ஏற்கனவே ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் சூரியை திருமணம் செய்து கொள்ளும் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் அனுதாபத்தையும் பெற்ற ரேஷ்மா அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

போனிகபூர் இயக்கத்தில், வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இதே கூட்டணி மீண்டும் அடுத்த புதிய படத்தில் இணைகிறது. இப்படத்தில் ரேஷ்மா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

CineReporter is No. 1 online news website.

Trending