படுக்கையை பகிர்ந்து கொள்ள கோடி பணம் கொடுப்பதாக புகார் கூறியிருந்த நடிகை சாக்‌ஷி சௌத்ரி தற்போது அது அட்மின் போட்டது என பல்டி அடித்துள்ளார்.

தெலுங்கு நடிகை சாக்‌ஷி தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். எனவே, சிலர் அவருக்கு ஆபாச அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது. இதுபற்றி கூறியுள்ள சாக்‌ஷி “எனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்து என்னை சிலர் படுக்கைக்கு அழைக்கின்றனர். அதுவும் ஒருவர் ரூ.1 கோடி தருகிறேன் என்கிறார். அவர்கள் அனைவரும் முட்டாள்கள். நான் விற்பனைக்கு அல்ல” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ‘அந்த டிவிட் நான் போடல. என் அட்மின் போட்டது. அவருக்கு வந்த மேசேஜ பாத்துட்டு அப்படி போட்டுவிட்டார்” என கூறியுள்ளார்.

பெரியாரை பற்றி சர்ச்சையான கருத்தை கூறிவிட்டு ‘அது அட்மின் போட்டது’ என ஜகா வாங்கிய ஹெச்.ராஜா போல் சாக்‌ஷி சௌத்ரியும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.