Actres Surekha vani – நடிகை சுரேகா வாணியின் கணவர் திடீரென மரணம் அடைந்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழி சினிமாக்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் சுரேகா வாணி. இவரின் கணவர் சுரேஷ் தேஜா. ஆந்திராவில் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய வகித்து வந்த அவர், உடல் நலக்கோளாறு காரணமாக இன்று மரணம் அடைந்தார்.

நடிகையாவதற்கு முன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த நேரத்தில் சுரேஷ் தேஜாவுடன் நட்பு ஏற்பட்டு, அதன் பின் காதலாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

தற்போது அவரின் மரணம் ஆந்திர தொலைக்காட்சி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.