என்.ஜி.கே. திரைப்படம் தொடர்பாக எழுந்த நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக அப்படத்தில் நடித்த சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் செல்வராகவன் ரசிகர்கள், சூர்யாவின் தீவிர ரசிகர்களை தவிர பொதுவான ரசிகர்களை கவரவில்லை. சினிமா விமர்சகர்கள் பலரும் இப்படத்தை கழுவி ஊற்றினர்.

அரசியல் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் செல்வராகவன் இப்படத்தை இயக்கியிருப்பதாகவும், சூர்யா பட இடங்கள் ஓவர் ஆக்டிங் செய்திருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது சூர்யாவுக்கு கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுவரை என்.ஜி.கே திரைப்படத்தை முழுதாக பார்ப்பதில் கூட அவர் இன்னும் ஆர்வம் காட்டவில்லை எனக்கூறப்படுகிறது.

மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என்.ஜி.கே. படம் மீதான அனைத்து விமர்சனங்கள், அன்பு மற்றும் கருத்துகளை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல் வித்தியாசமான முயற்சி மற்றும் நடிகர்களின் நடிப்பை பாராட்டிய பலருக்கும் நன்றி. இதை சாத்தியப்படுத்திய படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.