Actres Vinothini Husband – சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நடிகை வினோதியின் கணவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

வண்ன வண்ண பூக்கள் படம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வினோதினி. அதன் பின் அவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் நின்றதும், சின்னத்திரையின் பக்கம் சென்றார்.

இவரது கணவர் வெங்கட் ஸ்ரீதர்(52) கட்டிட வேலையை செய்து கொடுக்கும் காண்ட்ராக்டராக உள்ளார். இவர் நேற்று திருவான்மியூரில் இருந்து அண்ணா சதுக்கம் வரை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வீட்டின் முன்பு சென்ற போது, அவரது பைக் அந்த வழியாக வந்த பாஷா என்பவரின் வாகனம் மீது மோதியது. இதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கட்டிற்கு வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட, அடையாறு போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.