திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த துணை நடிகை யாசிகா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்நவர் யாசிகா(21). விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் கூட இவர் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

யாஷிகாவும், பெரம்பூரை சேர்ந்த மோகன்பாபு(22) என்பவரும் காதலித்ததோடு, பெரவள்ளூர் ஜி.கே.எம். காலணியில் ஒரு வாடகை வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் – மனைவியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோகன்பாபு அவரை விட்டு பிரிந்து தனது தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த யாஷிகா கடந்த 12ம் தேதி தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், நம்பி வந்த என்னை ஏமாற்றிவிட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் என்னை கொடுமைப்படுத்திய மோகன்பாபுவுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என அவரின் தாயாருக்கு வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.